தேதியை குறிச்சு வச்சுக்கோங்க..! ஆகஸ்ட் ரிலீசுக்கு தயாராகும் 'விஸ்வநாத் & சன்ஸ்'...! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா, தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வரிசையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அவரது 45-வது திரைப்படமான ‘கருப்பு’ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 46-வது திரைப்படம் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோர் தங்களது வலுவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ஏற்கனவே படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்த சூழலில், ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘விஸ்வநாத் அண் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mark date Vishwanath Sons set August release Official announcement


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->