நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா வழக்கு; மாமியாரான முன்னாள் நீதிபதி கிரிபாலா சிங்கை கைது செய்துள்ள சிபிஐ..!
Former Judge Kiribala Singh the mother in law of actress and model Twisha Sharma has been arrested in connection with the case
நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா கடந்த மே 12-ஆம் தேதி, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக மே 15-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அதே நாளில், ட்விஷா சர்மாவின் மாமியார் கிரிபாலா சிங்குக்கு போபால் விசாரணை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ட்விஷா சர்மாவின் கணவர் சமர்த் சிங் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் நீதிபதியான கிரிபாலா சிங்குக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று நள்ளிரவு ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தேவநாராயண் மிஸ்ரா; ட்விஷா சர்மா மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவரது மாமியாரான கிரிபாலா சிங் போதிய ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவர் மீது தீவிர குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் அதன் தீவிர தன்மையை விசாரணை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கத் தவறியுள்ளது. எனவே, கிரிபாலா சிங்குக்கு அளிக்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுவதாக உத்தரிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கிரிபாலா சிங்கை சிபிஐ கைது செய்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 'ட்விஷா சர்மாவின் மாமியாரும், ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியுமான கிரிபாலா சிங், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற திருமணத்தின் போது ரூ.2 லட்சம் வரதட்சணை கேட்டு கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி ரூ.2 லட்சத்தை கொடுத்துள்ளதாகவும்,திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே ட்விஷாவுக்கு அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரி பாலா சிங் ஆகியோரால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், திருமணத்துக்குப் பிறகு ட்விஷாவின் அடிப்படை தேவைகளுக்குக் கூட அவரது கணவரும் மாமியாரும் பணம் கொடுக்க மறுத்துள்ளதாகவும், இதனால், ட்விஷாவின் பெற்றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளதாக முதல் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Former Judge Kiribala Singh the mother in law of actress and model Twisha Sharma has been arrested in connection with the case