காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு எப்போது..? கிறிஸ்டோபர் திலக் தகவல்..!
Christopher Tilak provides details on when Chief Minister Vijay will meet with senior Congress leaders
தமிழக முதல்வர் விஜய் நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து காங்கிரசின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோரை சந்திப்பார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை முதல்வர்களை வரும் ஜூன் 11-ஆம் தேதி முதல்வர் விஜய் சந்திப்பார் என காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டோபர் திலக்; முதல்வர் விஜய் தனது இந்த டெல்லி பயணத்தை முழுக்க முழுக்க அரசியல் பயணமாக வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார் என நினைக்கிறேன். தற்போது பிரதமரை சந்தித்து சென்றுவிட்டார்.

அடுத்ததாக ஜூன் 11-ஆம் தேதி முதல்வர் விஜய் டெல்லி வருகிறார். அப்போது அவர் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் கண்டிப்பாக சந்திப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலர் இன்று டெல்லி வந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர் விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் முதல்வரோடு சகஜமாக பேச முடியாத நிலை ஒரு காரணமாக சந்திப்பு நிகழாமல் இருக்கலாம் என தான் நினைப்பதாக கூறியுள்ளார்.
மேலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிலை திறப்பு விழாவையும் விஜய் ஒத்திவைத்துள்ளதாகவும், எனவே, முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்ப ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Christopher Tilak provides details on when Chief Minister Vijay will meet with senior Congress leaders