நீட் கட்டணத்தை திரும்ப பெற அவகாசம் நீட்டிப்பு; ஜூன் 22 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யலாம்..! - Seithipunal
Seithipunal


மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 03-ஆம் தேதி நடத்தப்பட்டது. ராஜஸ்தானில் இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கு ஏற்கெனவே செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 27-ஆம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. இந்நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வரும் ஜூன் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 03-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களில் 13 லட்சம் பேர் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். அதன்படி, இதுவரை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in இணையம் வாயிலாக தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deadline to Claim NEET Fee Refund Extended Until June 22


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->