''தேசிய அரசியலுக்கு செல்வதில் ஆர்வம் இல்லை; மாநில அரசியலில் தொடருவேன்'' சித்தராமையா...!
I will continue in state politics says Siddaramaiah
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடம் வழங்கிய ராஜ்யசபா வாய்ப்பை நிராகரித்து விட்டு, மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மக்கள் மாளிகைக்குச் சென்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
ராஜ்யசபாவுக்குச் செல்லும் வாய்ப்பை நான் நிராகரித்துவிட்டேன். எனது அரசியல் பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை. நான் தொடர்ந்து மாநில அரசியலிலேயே தீவிரமாகச் செயல்படப்போகிறேன். தேசிய அரசியலுக்கு செல்வதில் எனக்கு எவ்வித ஆர்வமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும், ராஜ்யசபா வாய்ப்பு குறித்தும் என்னிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதை நிராகரித்துவிட்டதாகவும், தொடர்ந்து கர்நாடக அரசியலிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் மேலிடம் என்னை ராஜினாமா செய்யச் சொல்லும் போது, நிச்சயம் ராஜினாமா செய்வேன் என்று நான் உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன் அல்லவா? என்று கூறியதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு, மேலிடம் என்னைப் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டது. அதன்படியே, இப்போது நான் ராஜினாமா செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏழு கோடி மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது. இரண்டு முறை முதல்வராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் நான் பணியாற்றியுள்ளதாவதும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்ததிலிருந்து, கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு அளித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் ஒரு தற்செயல் அரசியல்வாதி. எனது குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி இருந்ததில்லை என்று செய்தியாளர்களிடம் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
I will continue in state politics says Siddaramaiah