அரசியல் கணக்கு ஓ.பி.எஸ். கையில்... ‘நல்லது எது என்பதை அவர் தீர்மானிக்கட்டும்’ ...! - நயினார் நாகேந்திரன்
Political calculations OPS hands Let him decide what good Nainar Nagendran
திருச்சியில் இன்று நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளைத் தெளிவாக பதிவு செய்தார்.அவர்,"வரும் மார்ச் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

கூட்டத்திற்கான தகுந்த இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என்றும், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற திராவிட முன்னேற்றக் கழகம் வின் கூற்றுக்கு பதிலளித்த அவர், யார் வெற்றி பெறுவது என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்றார்.
தேர்தல் வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றியதாக கூறும் தி.மு.க. அரசு, உண்மையில் பெரும்பாலான வாக்குறுதிகளை செயல்படுத்தவில்லை என்றும், மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தற்போதைய கூட்டணி 2021-இல் இருந்திருந்தால் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்றும், வரவிருக்கும் தேர்தலில் நிச்சயம் பெரிய வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு கஞ்சா பரவலால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறிவிட்டதாகவும், கொங்கு பகுதிகளில் முதியோர் கொலைகள் அதிகரித்துள்ளதுடன் பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் லாக்கப் மரணங்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் ஆட்சியின் செயல்திறனை கேள்விக்குறியாக்குகின்றன என்றார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாகியுள்ளது என்றும், தங்களது கூட்டணி வலுவாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ். குறித்து மரியாதை இருப்பதாகவும், அவருக்குச் சிறந்தது எது என்பதை அவர் தானே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும், சில தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், விரைவில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருவதாகவும், பேரிடர் நிதி, கல்வி நிதி உள்ளிட்ட பல உதவிகள் முறையாக ஒதுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.பின்னர், மார்ச் 11-ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான இடங்களை நயினார் நாகேந்திரன் கூட்டணி தலைவர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
English Summary
Political calculations OPS hands Let him decide what good Nainar Nagendran