தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றார் ஜி.வி.பிரகாஷ்!!
gv prakash get best music director award
நாட்டிலேயே சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள், சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் கடந்த 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில், வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார். தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
gv prakash get best music director award