தேவையான பொருட்கள்:-
ஆட்டுக்குடல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், கல் உப்பு, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை.
செய்முறை
ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டு தேய்த்து நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை குக்கரில் போட்டு சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வேகவைத்த குடலை சேர்த்து மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறுகிய பதத்திற்கு வந்தவுடன் எடுத்தால் சுவையான ஆட்டுக்குடல் வறுவல் தயார்.