நடிகர் சூர்யா வீட்டில் அதிர்ச்சி: பாதுகாவலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ள வேலைக்கார குடும்பம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
Family arrested for defrauding actor Suriya security guard
பிரபல தமிழ் திரையுலக நடிகர் சூர்யாவின் பாதுகாவலர் அந்தோணி ராஜிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்த புகாரில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த சுலோச்சனா அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை சென்னை மாம்பலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாகக் கூறி, பல பேரிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது போன்று பலரிடம் மோசடி செய்தது அம்பலமானதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இவர்கள் மோசடியில் ஈடுபட்டமை நடிகர் சூர்யாவுக்கு தெரிந்ததும், அவர் உடனடியாக அவர்களை பனி நீக்கம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, உடனடியாக 5500 ரூபாய் காட்டினால் மாதம் 01 கிரேம் தங்கம் நாணயம் கிடைக்கும் என்று கூறி இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் இவர்கள் நல்ல தங்கத்தை கொடுத்து விட்டு, அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மதங்கடலுக்கு பிறகு அதிபதியான தொகையை பெற்று போலியான தங்க நாணயங்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு பல பேரிடம் ஏமாற்றியுள்ளமை விசாரணையின் அம்பலமாகியுள்ள நிலையில், இந்த குடும்பத்தினர் மீது அண்ணாநகர், மாதவரம் போன்ற காவல் நிலையங்களிலும் மோசடி புகார் உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Family arrested for defrauding actor Suriya security guard