மைனஸ் 50 டிகிரி குளிர்: விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்து வந்த ஆப்கானிஸ்தான் சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம் : டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ‘காம் ஏர்’ விமானம். வந்துள்ளது. இதில், 13 வயது சிறுவன் ஒருவன் விமானத்தின் சக்கரம் வைக்கும் பெட்டியில் ஒளிந்து பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம்  பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், காபூலில் இருந்து இரண்டு மணி நேர பயணத்தில் குறித்த விமானம் டெல்லியில் தரையிறங்கியுள்ளது.

அப்போது விமான ஊழியர்கள், விமானத்திற்கு அருகில் சிறுவன் ஒருவன் சுற்றித் திரிவதைக் கண்டுள்ளனர். பின்னர் அவனைப் பிடித்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரிடம் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒப்படைத்துள்ளனர்.

அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும், ‘ஆர்வம் காரணமாக’ அபாயத்தை உணராமல் விமானத்தின் சக்கரம் வைக்கும் பெட்டியில் ஏறிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளான். அத்துடன், அவனிடம் உரிய ஆவணங்கள் இல்லாததாலும், சிறுவன் என்பதாலும், அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அதனையடுத்து அவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அன்றைய தினமே அதே விமானத்தில் அவன் மீண்டும் காபூலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளான்.

அதனையடுத்து, விமானத்தின் சக்கரப் பெட்டியை சோதனையிட்டட்டுள்ளனர். அப்போது சிறுவனுக்கு சொந்தமானது எனக் கருதப்படும் சிறிய சிவப்பு நிற ஒலிபெருக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளது.

இந்த சம்பவம் காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாட்டை எவ்வாறு உள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து, விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் இந்த சிறுவனின் உயிர் பிழைப்பை ஒரு ‘அதிசயம்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

ஏனெனில், விமானம் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும்போது, சக்கரம் வைக்கும் பெட்டியில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை குறையும். மேலும், அங்கு காற்றழுத்தம் மற்றும் வெப்ப வசதி இல்லாததால், ஆக்சிஜன் பற்றாக்குறை, உடல் வெப்பம் குறைதல் மற்றும் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படும் போது நசுங்கி உயிரிழக்கும் அபாயம் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த சூழலில் அவன் எவ்வாறு பயணித்துள்ளான் என்பது புரியாத புதிர்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Afghan boy hides in plane wheel in minus 50 degree weather


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->