பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் மற்றும் கவன சிதறல் ஏற்படும் அபாயமா..? உலக சுகாதார மையம் கூறுவது என்ன..?
World Health Organization clarifies Trump claim that paracetamol tablets cause autism
பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆட்டிசம் பிரச்னை ஏற்படும்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை என உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க அதிபர், பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ அதனை தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டை உலக சுகாதார மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக WHO வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வளி குறைக்க இது அவசியம். கடலகளவில் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்த பாராசிட்டமால் மாத்திரை பல நாடுகளில் பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. காய்ச்சல் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் உருவாகும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதன்காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைப்படி நடந்து கொள்வது நல்லது. ஆனலும், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகவே கருதுகின்றனர்.
English Summary
World Health Organization clarifies Trump claim that paracetamol tablets cause autism