திரைப்பட டிக்கெட்களின் விலை ரூ.200 உத்தரவு: உயர்நீதிமன்றம் தடை..!
High Court stays order to set movie ticket price at Rs 200
கர்நாடகாவில் சினிமா தியேட்டர்களில் ரூ.200 கட்டணம் நிர்ணயம் என்ற அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. மல்டிபிளக்ஸ் சங்கம், சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு மீதுஉயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும், மல்டிபிளக்ஸ்களிலும் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு வரியைத் தவிர்த்து அதிகபட்ச சீரான விலை ரூ.200 என நிர்ணயித்து மாநில அரசு பிறப்பித்தது.இந்த விதிகளுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அதாவது, இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் (MAI) மற்றும் ஹோம்பலே பிலிம்ஸ் உட்பட பல தயாரிப்பு நிறுவனங்கள் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதன்படி, இந்த அரசாங்க விதி திரையரங்குகளின் வணிக உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1964-ஐ திருத்தி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை ரூ.200 ஆகக் குறைத்து செப்டம்பர் 12-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. குறிப்பாக 75 இருக்கைகளுக்குக் குறைவான பிரீமியம் மல்டி-ஸ்கிரீன்கள் மட்டுமே இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டன.
இதனையடுத்து, மனுதாரர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள், திரையரங்குகள் கட்டுமானத்தில் பெரும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து டிக்கெட்டுகளையும் ரூ.200க்கு விற்க உத்தரவிட முடியாது என்று வாதிட்டுள்ளனர். இதையடுத்து "இந்த விதி மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. மலிவு விலையில் மக்களுக்கு பொழுதுபோக்கு வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்" என அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கர்நாடக உயர்நீதிமன்ற, நீதிபதி தலைமையிலான அமர்வு, அரசாங்க உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணையை ஒத்திவைத்துள்ளது. இத்தகைய உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை திரையரங்குகள் அவற்றின் முந்தைய விலை நிர்ணய முறையைத் தொடர அனுமதித்துள்ளது.
English Summary
High Court stays order to set movie ticket price at Rs 200