இறைச்சி, மீன் விற்பனைக்குத் தடை..எங்கு தெரியுமா?
Meat and fish sales banned Do you know where?
நவராத்திரி விழாவின் போது இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதிப்பதாக போபால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழா, வட மாநிலங்களில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். அந்தவகையில் தற்போது நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும் விழாவாக நடந்து வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியுள்ளது. இந்த விழா, அக்டோபர் 2ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிலையில், நவராத்திரி விழாவின் போது இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை விதிப்பதாக போபால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து போபால் துணைப் பிரிவு நீதிபதி திவ்யா படேல் கூறியதாவது, ‘நவராத்திரி செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கும். இதைக் கருத்தில் கொண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த நகரில் இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் , குருகிராமில் விஸ்வ இந்து பரிஷத் நவராத்திரியின் போது அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளையும் மூடக் கோரி துணை ஆணையரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர் .அதில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள கடைகள், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், குடிமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Meat and fish sales banned Do you know where?