நகைப்பு! ரெய்டுக்கு பயந்து சுந்தரா ட்ராவல்ஸ் பேருந்தை எடுத்துக்கொண்டு அமித்ஷா வீட்டின் கதவை தட்டினார் இபிஎஸ்! - முதலமைச்சர்
Fearing raid EPS took Sundara Travels bus and knocked on Amit Shahs house door Chief Minister
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ரூ.48 கோடியில் 47 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிய வைத்தார்.மேலும், ரூ.113.51 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது," விமர்சனம் என்கிற பெயரில் நமக்காக விளம்பரம் செய்யும் இ.பி.எஸ்-க்கு நன்றி. தேர்தலுக்கு முன் பெட்சீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்ஸல் ஷீட்டாக மாற்றி வொர்க் ஷீட்டாக மாற்றினேன். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட தி.மு.க. அரசின் அனைத்து திட்டங்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களையும் சென்றடைகிறது.
தமிழக மக்கள் தொடர்ச்சியாக இ.பி.எஸ்.க்கு டாடா, பை - பை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். சுந்தரா டிராவல்ஸ் போல் ஒரு பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து புகை வருவது போல் இ.பி.எஸ். வாயிலிருந்து பொய்யாக வருகிறது.
உங்கள் குடும்ப நலனுக்காக டெல்லி சென்று அ.தி.மு.க.வை அடகுவைத்தவர் எடப்பாடி பழனிசாமி. ரெய்டில் இருந்து குடும்பத்தை காக்கவே இ.பி.எஸ். அமித்ஷா வீட்டின் கதவை தட்டினாரே தவிர நமது மக்களுக்காக அல்ல. சொந்த கட்சியினரான அ.தி.மு.க.வினரே எடப்பாடி பழனிசாமியை நம்பாதபோது தமிழக மக்கள் எப்படி நம்புவர்?
குடும்பத்தை காப்பாற்ற டெல்லியின் சதுரங்க வேட்டையில் சிக்கி தொண்டர்களை ஏமாற்றினார் இ.பி.எஸ். தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் அ.தி.மு.க.-வினர் வீட்டுக்கும் போவதை இ.பி.எஸ்.-ஆல் மறுக்க முடியுமா? உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து இ.பி.எஸ். அவதூறு பரப்பி வருகிறார்.
நம்மை ஒருபோதும் ஸ்டாலின் கைவிட மாட்டார் என தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அடுத்து அமைய போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் என்பதை உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Fearing raid EPS took Sundara Travels bus and knocked on Amit Shahs house door Chief Minister