அதிமுக -பாஜக கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது...! என் முடிவு மட்டும் தான் அங்கு பலிக்கும்..! - எடப்பாடி பழனிச்சாமி
AIADMK BJP alliance there is no coalition government Only my decision will prevail there Edappadi Palaniswami
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி'யிடம், ''உங்களுடன் ஸ்டாலின் திட்டம்'' குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், விளம்பர மாடல் ஆட்சி எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி:
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது," அரசு ஊழியர்கள் அரசுக்காக அரசியல்வாதியாக மாறிவிடக்கூடாது. எனக்கு விவசாயம் தொழில் தான் உள்ளது. எனக்கென கம்பெனி எல்லாம் கிடையாது.
மக்கள் பிரச்சனைக்காக தான் டெல்லி செல்வோம். 2001-ல் பா.ஜ.க.வுடன் தான் தி.மு.க. கூட்டணி வைத்தது. அப்போது ஏன் இவ்வாறு பேசவில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று அறிவித்ததால் முதலமைச்சருக்கு பயம்.
எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா தெரிவித்துவிட்டார். அதிமுக, பாஜக, கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி கிடையாது. எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நான் சொல்வது தான்.
பா.ம.க.வில் நடக்கும் உட்கட்சி பிரச்சனைகளில் நாங்கள் தலையிட முடியாது" என்று தெரிவித்தார்.இந்நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காலம் கடந்துவிட்டதாக பதில் தெரிவித்தார்.
English Summary
AIADMK BJP alliance there is no coalition government Only my decision will prevail there Edappadi Palaniswami