விளம்பரத்துக்காக இப்படிச் செய்வதா? கடும் விமர்சனத்திற்க்கு ஆளான நடிகை கஜோல்! - Seithipunal
Seithipunal


டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஓடிடி தளத்தில்,   நடிகை கஜோல் முன்னெடுத்த புதிய வெப் சீரிஸ், ஒன்றின் விளம்பரம் சம்மந்தமான செயல் இரசிகர்ககளிடையே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதைத்தொடர்ந்து #ShameOnKajolHotstar என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகை கஜோல், தமிழில் ராஜீவ்மேனன் இயக்கிய மின்சாரக் கனவு படத்தில் நடித்து பிரபலமானவர்.சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நடிகர் தனுஷிடன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

அவருடைய அந்த நெகட்டிவ் ரோல் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற தொடரில் நடிகை காஜல் நடித்துள்ளார். இந்தத் தொடர் வருகின்ற 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜூன் 9) தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை காஜல் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டதாவது, “வாழ்வின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

குறிப்பாக அவர், toughest trials’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். அந்த பதிவை ரீடிவிட் செய்த அவருடைய ரசிகர்கள், ‘நம்பிக்கையை தளரவிட வேண்டாம்’ என்று ஆறுதல் கூறினர்.நடிகை கஜோல் நடித்து வெளியாகியுள்ள ‘தி ட்ரையல்’ (The trial) என்ற வெப் சீரிஸ் வருகின்றன ஜூன் 12-ம் தேதி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்த வெப்சிரிஸ் விளம்பரம் குறித்து நெட்டிசன் ஒருவர், காஜல் குறித்து மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ரசிகர்களை அவர் மதிப்பதில்லை என்பது தெளிவாகியுள்ளது” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.நடிகை காஜல் ரசிகர்களை விட பணத்துக்கு முன்னுரிமை கொடுப்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது. கஜோல் மீதான மரியாதை உடைந்துவிட்டது, இவ்வாறு நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doing this for publicity Actress Kajol who has faced severe criticism


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->