அந்த படத்தில் அஜித், பிரசாந்த் இடையே மோதலா.? இயக்குனர் சரண் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் சரண். தல அஜித் குமாரை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். சியான் விக்ரம் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெமினி படத்தின் இயக்குனரும் இவர்தான்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் மற்றும் பிரசாந்த் இடையேயான மோதல் குறித்து பேசி இருக்கிறார் இவர். கல்லூரி வாசல் திரைப்படத்தில் அஜித் மற்றும் பிரசாந்த் இருவரும்  இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் மற்றும் பிரசாந்திடையே மோதலிருப்பதாகவும் பிரசாந்த் அஜித்தை அவமானப்படுத்தியதாகவும் பல செய்திகள் வெளிவந்திருந்தன.

இயக்குனர் சரணின் பேட்டி அதையெல்லாம் மறுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் சரண் அஜித்துக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் அப்படியே ஒதுங்கி விடுவார். அவர்கள் சார்ந்த இந்த விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டார். இதுதான் அஜித்தின் குணம்.

ஆனால் பிரசாந்த் நடித்த 'பார்த்தேன் ரசித்தேன்' உள்ளிட்ட திரைப்படங்களை அவர் பார்த்திருக்கிறார். மேலும் அஜித் மற்றும் பிரசாந்திடையே எந்த மோதலும் இல்லை என தெரிவித்துள்ளார். இந்தப் பேட்டியில் அமர்க்களம் திரைப்படத்தின் போது நடந்த சில சுவாரசியமான தகவல்களையும் அஜித் மற்றும் ஷாலினி இடையேயான  காதலைப் பற்றியும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் சரண்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

director seran interview about ajith and prasanth clash


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->