பிரபல தமிழ்ப்பட இயக்குனர் மாரடைப்பால் மரணம்!  - Seithipunal
Seithipunal



நடிகர் பார்த்திபன் நடித்து வெளியான குண்டக்க மண்டக்க திரைப்படத்தின் இயக்குநர் எஸ். அசோகன் மாரடைப்பால் காலமானார். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் இயக்குனர் எஸ். அசோகன். இவர் நடிகர் பார்த்திபனை வைத்து 'குண்டக்க மண்டக்க' படத்தை இயக்கி பிரபலமானார்.

மேலும், தமிழச்சி, பொன்விழா, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள எஸ். அசோகன், பின்னர் திரைப்படங்கள் ஏதுமின்றி அமைதியானார்.

இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 64.

அவரது உடல் சென்னையிலிருந்து எடுத்து வரப்பட்டு, அவரது சொந்த ஊரான உள்ளிக்கோட்டை இல்லத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் இன்றிரவு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. 

மறைந்த இயக்குனர் அசோகனுக்கு ராஜலெட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director S Ashohan Death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->