நடிகையை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்" வலுக்கும் கண்டனங்கள்! - Seithipunal
Seithipunal


ஆதி புரூஷ் திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கீர்த்தி சேனானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த விவகாரத்தில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

அம் மாநில பாஜக தலைவர் ரமேஷ் நாயுடு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், உங்களது முட்டாள்தனங்களை புனிதமான ஒரு இடத்துக்குள் கொண்டு வருவது அவசியமா? திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்கு முன்னாள் கட்டிப்பிடிப்பது, முத்தமிட்டுக் கொள்வது போன்ற அன்பை வெளிப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவது, மரியாதைக் குறைவானது மற்றும் ஏற்றுக் கொள்ளமுடியாதது” என்று பதிவிட்டுள்ளார். 

ராமாயணத்தை மையமாக வைத்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் வில்லனாக சையது அலிகான் நடிகையாக கீர்த்தி சேனன் உட்பட பலர்  நடிக்கின்றனர். 

படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது இந்நிலையில் பட குழுவினர் திருப்பதியில்  தரிசனத்திற்காக சென்றனர். அப்போது இயக்குனர் படத்தின் நாயகியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி  அதிருப்தியை பெற்று இருக்கிறது.

ஆந்திர பாஜக தலைவர் தன்னுடைய டிவிட்டர் பதிவை சில நேரங்களில் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director kissed And Hugged Highly Issued In Social Media


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->