ஹாலிவுட் படம் இயக்க அழைப்பு - நெகிழ்ச்சியில் இயக்குனர் அட்லீ.! - Seithipunal
Seithipunal


ஹாலிவுட் படம் இயக்க அழைப்பு - நெகிழ்ச்சியில் இயக்குனர் அட்லீ.!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவரது இயக்கத்தில் பிரபல நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வௌியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் 'ஜவான்'. ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

மேலும், இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 7-ம் தேதி வௌியாகி சுமார் 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், ஏராளமான திரைப்பிரபலங்கள் அட்லீ மற்றும் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் அட்லீ 'ஜவான்' பட வெளியீட்டிற்கு பிறகு ஹாலிவுட் திரையுலகில் இருந்து அழைப்பு வந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் திரைப்படம் இயக்குவதற்கு அழைப்பு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director atlee receievs hollywood movie offer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->