இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகரமான மாரிமுத்து, இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. இவர் தேனியை சேர்ந்தவர்.

டப்பிங் முடித்துவிட்டு சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பியப்போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்கிரண், எஸ்.கே சூர்யா உள்ளிட்டோரிடம் நடிகர் மாரிமுத்து உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

நடிகர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், நடிகர் விமல் நடித்த புலிவால் ஆகிய படங்களை மாரிமுத்து இயக்கி உள்ளார்.

மேலும் விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட படங்களிலும் நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். யுத்தம் செய், கொம்பன், மருது உள்ளிட்ட திரைப்படங்களின் அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றும் பேசப்படுகிறது.

சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் மாரிமுத்து நடித்து பெயர் வாங்கியுள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகர் மாரிமுத்து. 

அதிலும், குறிப்பாக ஏம்மா ஏய்... என்ற அவரின் வசனம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Actor marimuthu passed away Due to Cardiac Arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->