தோனி தயாரிக்கும் 'LGM' படத்தின் டீஸர் வெளியீடு.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருந்தது. அத்துடன் இவரது முதல் திரைப்படம் தமிழில் தான் என்று கூறப்பட்டது.

 அந்த வகையில் தோனி தயாரிக்கும்  படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதன்படி, இந்த படத்திற்கு LGM (Let's Get Married) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் MS தோனி தயாரிக்கும் முதல் படமான LGM படத்தின் டீஸரை இன்று இரவு 7 மணிக்கு தோனி மற்றும் சாக்ஷி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் டீஸர் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni in LGM movie teaser release


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->