தனுஷ் உடன் இணையும் ஜூனியர் என்டிஆர்.. பான் இந்தியா படமாக பிளான் போடும் வெற்றிமாறன்.! - Seithipunal
Seithipunal


பெயருக்கு ஏற்றதைப் போல எடுத்த அனைத்து படங்களிலும் வெற்றி பெற்றவர்தான் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது, இவர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகின்றார். ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 மேலும் விஜய் சேதுபதியை தொடர்ந்து, இதில் மூத்த இயக்குனரான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படமானது லிமிட்டை தாண்டி எடுக்கப்பட்டு இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, முதல் பாகத்திற்கான வேலைகளை படக்குழு விறுவிறுப்பாக முடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் கூடுதலாக கௌதம் மேனனும் நடித்து இருக்கிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்யும் தகவலாக இருக்கின்றது. 

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகின்ற மார்ச் 8-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த திரைப்படத்தை ரெட்ஜன்ட் மூவிஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பை விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush junior NTR act in vetrimaran movie


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->