நடிகர் தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்.. 51வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Dhanush in 51th movie directed by sekar kammula
நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு தனது 51வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நாளை தனது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகிறது.
இந்த நிலையில் தனுஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் 51 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கிறது. இதனையடுத்து இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் தனுஷ் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Dhanush in 51th movie directed by sekar kammula