இரண்டாவது திருமணம் பற்றி நடிகர் தனுஷ் செல்வராகவனுக்கு அட்வைஸ்.!
dhanush advice his brother selvaraghavan after he got divorce from soniya agarwal
தமிழ் சினிமாவில் சகோதரர்களாக கொடி கட்டி பறந்தவர்களில் முக்கியமானவர்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தனுஷ் கதாநாயகனாகவும், செல்வராகவன் இயக்குனராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் மற்றும் இயக்குனராக இருவரும் உயர்ந்தனர்.
காதல் கொண்டேன் திரைப்படத்தில் சோனியா அகர்வாலை கதாநாயகியாக அறிமுகம் செய்தவர் செல்வராகவன். அதன் பின் அவர் எடுத்த 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்திலும் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். சோனியா அகர்வாலும் செல்வராகவனும் காதலர்களாக இருந்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அதன் பிறகு செல்வராகவன் கீதாஞ்சலி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான தனது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் செல்வராகவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சோனியா அகர்வால் உடனான தனது விவாகரத்திற்கு பிறகு தனுஷ் தன்னிடம் கூறிய ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
அந்த விஷயம் பற்றி பேசிய செல்வராகவன் "சோனியா அகர்வாலின் விவாகரத்திற்கு பின் என்னிடம் வந்த தனுஷ் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இரு, கடவுள் உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்" எனக் கூறியதாக தெரிவித்தார். ஆனால் தான் கீதாஞ்சலி மேலிருந்த நம்பிக்கையால் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறினார் செல்வராகவன்.
English Summary
dhanush advice his brother selvaraghavan after he got divorce from soniya agarwal