சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, நாசர், பிரபு, வடிவேலு நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.

இதனையடுத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் வாசு முடிவு செய்தார். அதன்படி சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சரத்குமார், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி, இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்கங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்வாகதாஞ்சலி’ எனத் தொடங்கும் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 1st single promo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->