ஏ.ஆர்.ரகுமானை நெகிழவைத்த வெளிநாட்டு சிறுமி.! வைரல் பதிவு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு நடிப்பில் இறுதியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகியது. அதன் பின் நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த பத்து தல திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கின்றார்.

சமீப காலமாக இந்த பத்து தல திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகியது. நம்ம சத்தம் என்ற முதல் பாடல் ஏ ஆர் ரகுமான் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இத்தகைய நிலையில், வெளிநாட்டு சிறுமி ஒருவர் இந்த நம்ம சத்தம் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருப்பது வைரலாகி இருக்கின்றது. இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ரகுமான் பகிர்ந்து சூப்பர் நம்ம சத்தம் அக்கறையில் கூட கேட்குது என்று தெரிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ar rahman post about namma satham dance Of Foreign girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->