வெட்கப்பட்டு சிணுங்கும் அஞ்சலி.! உடன் இருப்பது யார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெய்யுடன் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பவர் அஞ்சலி. தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் அவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். 

லேசான கவர்ச்சியுடன் குடும்பப்பாங்கான கேரக்டரில் அஞ்சலி நடித்த  ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்தாலும், அஞ்சலியின் திறமையை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கதை ஏதும் அமையவில்லை என்பதே உண்மை. தற்போது பட வாய்ப்புகளை பெற அஞ்சலி சமூக வலைதளப் பக்கங்களில் சற்று கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். 

அவர் மிகவும் தைரியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அஞ்சலியின் பெயர் தமிழ் சினிமாவில் பதியவில்லை. முன்பெல்லாம் அஞ்சலியின் இணையதள பக்கத்தில் மிகவும் கூலான புகைப்படங்களை காண முடியும். 

ஆனால், தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். சமீபத்தில் அவர் தனது படுக்கை அறையில் நைட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை கண்ட ரசிகர்கள் பலரும் அடக்கம் எல்லாம் அவ்வளவுதானா அஞ்சலி மா? என்று கிண்டல் செய்தனர். இந்த நிலையில், அஞ்சலி தனது நாய்குட்டியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அதில் சிணுங்கி கொண்டு இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anjali photo with dog


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal