அனிதாவின் சோகக்கதையை கண்ணீர் வடித்த குடும்பம்.. சம்யூக்தாவின் சின்னத்தனமான வேலை.. நொறுங்கிப்போன இதயம்.! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழில் நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. நான்காவது சீசன் வெற்றிக்காக போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்தில் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கின்றனர். பிக் பாஸ் இல்லத்தில் முதல் நபராக நடிகை ரேகா வெளியேறினார்.

பிக் பாஸ் இல்லத்திற்குள் நடிகர் ரியோ, நடிகை சனம் செட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி அர்ஜுனன், குத்து சண்டை வீரர் சோம சேகர், கேப்ரியல்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆர்ஜித் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், " பிக் பாஸ் இல்லத்தில் இன்று போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடைபெற்ற தருணங்களை பகிர்ந்துகொண்டு வந்தனர். செய்தி வாசிப்பாளர் அனிதா நான் பிறந்ததில் இருந்து தந்தையின் அரவணைப்பில் இல்லாதவல், அப்பாவின் பாசத்திற்காக நான் ஏங்கினேன். எனக்கு அப்பா பாசத்தை காண்பித்தவர் எனது கணவர் என்று தனது வருத்தத்தை பதிவு செய்து கொண்டு இருப்பார்.

இதன்போது குறுக்கிட்ட சம்யூக்தா, அனிதா நீ பேசுவது பெரிதாக சென்று கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். இதனைக்கேட்ட சக போட்டியாளர்கள் குபீரென சிரித்துவிடவே, ஆத்திரமடைந்த அனிதா நன்றி என்று கூறிவிட்டு கீழே இறங்கி வருகிறார். " இது குறித்த காட்சிகள் இன்று வெளியான ப்ரமோவில் இருக்கிறது.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் பெரும் ஆத்திரத்துக்கு உள்ளாகியுள்ளனர். அனிதா தனது கவலையினை பகிர்ந்து வரும் போது எதற்காக குறுக்கிட்டு சம்யூக்தா இடைநிறுத்துகிறார் என்றும், எதற்காக போட்டியாளர்கள் சிரிக்கிறார்கள் என்றும் கொந்தளித்துள்ளனர். மேலும், ஒருவரின் துக்கத்தில் பங்குகொள்ளவில்லை என்றாலும், அதனை உதாசீனப்படுத்துவது எப்படிப்பட்டது? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். 

துவக்கத்தில் இருந்தே அனிதாவை குறுகிய வட்டத்தில் அடைக்க முயற்சிக்கும் போட்டியாளர்கள், அவர் பேசும்போதெல்லாம் குறுக்கிட்டு அல்லது கவனிக்காதது போல செயல்பட்டு வருகின்றார். திட்டமிட்டே நடத்தப்படும் போட்டியில், தாங்களும் மக்கள் மத்தியில் அறிமுகமாக வந்ததை போல, அவரும் மக்களிடம் பிரபலமாவதில் என்ன உங்களுக்கு சங்கடம்? என்று கட்டமான கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anitha Sampath Irritates by Samyuktha Bigg Boss Season 4 29 October 2020 Promo


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal