ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கண்ணீர் விட்டு அழுத தனுஷ்! தனுஷ் செல்வராகவன் இடையே நடந்த மோதல்.!
an assistant director explains about a clash between dhanush and selvaraghavan
இயக்குனர் செல்வராகவும் மற்றும் தனுஷ் இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்று. அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கின்றனர்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அமைந்த இந்த கூட்டணி காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் தற்போது வெளியாகிய நானே வருவேன் என பல அற்புதமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின் போது இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி தனுஷை அடித்திருக்கிறார். அந்தச் செய்தியை தற்போது செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட அந்த படம் வந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சம்பவம் தற்போது வெளியே வந்திருக்கிறது.
காதல் கொண்டேன் படப்பிடிப்பின் போது தனுஷ், சோனியா அகர்வால் ஒரு பழமையான வீட்டிற்கு கொண்டு வருவது போன்ற காட்சியமைக்கப்பட்டு இருக்கும். அந்தக் காட்சியின் படப்பிடிப்பின் போது தனுஷிற்கு சரியான முகபாவனை வரவில்லை எனக் கூறி கோபத்திலிருந்து செல்வராகவன் அவரை கன்னத்தில் அடித்தாராம். இதனால் தனுஷ் மனம் உடைந்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அழுததாக அந்த உதவி இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
English Summary
an assistant director explains about a clash between dhanush and selvaraghavan