தலையின் தடுமாற்றத்திற்கு வலிமை காரணமா.?! பெயர் மாறும் அஜித் படம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தின் 60வது படத்தை இயக்குனர் வினோத் இயக்கிவருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். 

வலிமை படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதன்பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வலிமை திரைப்படம் நவம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வலிமை படப்பிடிப்பில் நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், கை மற்றும் காலில் அடிபட்டு இருந்த போதிலும், நடிக்க  வேண்டிய காட்சிகளை நடித்து கொடுத்து விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், படத்தின் தலைப்பு “வலிமை” என்று இருப்பதால் தான், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என்று ஒரு ஜோசியர் கூறிவிட்டதாகவும், இதனால், படத்தின் தலைப்பை மாற்றுவது குறித்து படகுழு ஆலோசித்து வருவதாகவும் சில தகவல்கள் கசிந்து வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith movie title 'valimai' may changed


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal