அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்.. 62வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இயக்குனர் யார் தெரியுமா.?
Ajith Kumar 62 movie name Vidamuyarchi
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் இறுதியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமார் நடிக்கும் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது முடிவு செய்யாமல் இருந்தது.
இதனிடையே நடிகர் அஜித் குமாரின் 62வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 62 ஆவது படத்தை தயாரிக்கும் நிறுவனமான லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Ajith Kumar 62 movie name Vidamuyarchi