கொடைக்கானல் சென்ற 'அருவி' அதிதி பாலன்! சுற்றிவளைத்த அதிகாரிகள்! தமிழகத்தில் இப்படி ஒரு சட்டம் இருப்பது தெரியாமல் சிக்கி பரிதாபம்! - Seithipunal
Seithipunal


முகக் கவசம் அணியாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற அருவி திரைப்படத்தின் நாயகி அதிதி பாலனுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். அபராதம் விதித்த அதிகாரிகளுடன் அப்போது நடிகை அதிதி பாலன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தற்போது சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படுகின்றனர்.

கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானல் ஏரியின் சாலை பகுதியில் சுற்றுலா துறையினர், மருத்துவத் துறையினர்  மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

அப்போது அந்த வழியாக முக கவசம் அணியாமல் காரில் பயணம் செய்த, அருவி திரைப்படத்தின் நடிகை அதிதி பாலனுக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதித்தனர். இதனால் நடிகை அதிதி பாலன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் வாக்கு வாதத்தில் கண்டுகொள்ளாத அதிகாரிகள் அவருக்கு அபராதம் விதித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aditi balan fined for face mask


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal