ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள ரெடி.. ஆனால் ஒரு கண்டிஷன்.. பிரபல நடிகை ஓபன்டாக்.!
Actress sherlin Chopra speech about married to Rahul Gandhi
பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள ஓகே தெரிவித்து, ஆனால் ஒரு கண்டிஷன் விதித்துள்ளார்.
தமிழில் யுனிவர்சிட்டி என்ற திரைப்படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷெர்லின் சோப்ரா நாள்தோறும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து ஈர்த்து வருகிறார்.
இவரது புகைப்படங்களை பார்க்கவே சமூக வலைதளங்களில் இளம் ரசிகர்கள் ஷெர்லின் சோப்ராவை ஃபாலோ செய்து வருகின்றனர். ரசிகர்களுடன் இயல்பாக பழகும் ஷெர்லின் சோப்ரா அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொள்வார்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் போது ரசிகர் ஒருவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஷெர்லின் சோப்ரா, "ஆம், ஏன் கூடாது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு எனது குடும்பப் பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன்" என தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Actress sherlin Chopra speech about married to Rahul Gandhi