தனது நரைத்த முடி குறித்து உருக்கமாக பேசிய சமீரா ரெட்டி.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம்,வெடி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் பிரபலம் அடைந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. 

தற்போது, இவர் சமூக வலைதளங்களில் உடல் மேலாண்மை குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சமீராரெட்டி   மேக்கப் எதுவுமின்றி நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. 

இத்தகைய சூழலில், அவர், "நான் என் முடியை மறைப்பதில்லை. இதுகுறித்து ஏனென்று என் அப்பா கூட என்னிடம் ஒருமுறை கேள்வி எழுப்பியிருந்தார். நான் அதற்கெல்லாம் கவலைப் படுவதில்லை. ஒரு காலத்தில் எனது தலைமுடிக்கு நான் டை அடித்து வந்தேன். 

இப்போது நேரம் கிடைத்தால் மட்டும்தான் கருப்பு சாயம் பூசுகிறேன். என்னிடம் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்னுடைய தந்தை புரிந்து கொண்டார். டை அடித்தால் மட்டும் நான் அழகானவள் இல்லை. என்னிடம் அழகு எப்போதும் குடிகொண்டிருக்கும்." என்று தன்னம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Sameera reddy speech about Her White Hair


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal