வாகை மலர், இரண்டு வண்ணம்! நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்த செம்ம அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இரண்டு வண்ணங்களில் தயாராகி உள்ளதாக, ஒரு பரபரப்பு தேதி தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் பண்டைய கால தமிழ் சின்னமாக கருதப்படும் வாகை மலர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்த் திரை உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் "தமிழக வெற்றிக்   கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதன் மூலம் அவரின் அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கு முன்பே கட்சியை தொடங்கியிருந்தாலும், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல் தான் தங்களுடைய இலக்கு என்று, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து, அதற்கான பணிகளையும் தொடங்கி உள்ளது. 

குறிப்பாக கட்சி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் ஆனந்த், பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் கட்சியின் அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கான கட்சிக்கொடி வடிவமைக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 

வெளியான தகவலின் படி இரண்டு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்சி கொடியில், பண்டைய கால தமிழ் மலரான வாகை மலரும் கட்சியின் கொடியில் இடம் பெற உள்ளதாக தெரிகிறது. 

வாகை என்றால் வெற்றியின் அடையாளம். விஜய் என்றால் வெற்றியின் அடையாளம் என்ற கண்ணோட்டத்தில் கட்சியின் கொடி அமைக்கப்படுவதாக தெரிகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay TVK Party flag update


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->