அன்பு இதயங்களே 90% குணம் அடைந்து விட்டேன்.. நடிகர் விஜய் ஆண்டனி ட்விட்..!! - Seithipunal
Seithipunal


நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ல் இயக்குனர் சசி இயக்கியிருந்த 'பிச்சைக்காரன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. கதாநாயகனாக விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இதற்காக விஜய் ஆண்டனி மலேசியாவில் உள்ள லங்காவி தீவிற்கு படப்பிடிப்பதற்காக சென்று இருந்தார்.

லங்காவி தீவில் நடைபெற்ற பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது படகில் சென்ற நடிகர் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையை கலந்த ஜனவரி 24ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நன்கு குணம் அடைந்து வருவதாகவும் தடை மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் முக்கிய அறுவை சிகிச்சைகள் முடிவடைந்ததால் கூடிய விரைவில் நலம் பெறுவேன் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பிச்சைக்காரன் 2 பட வேலை இன்று முதல் தொடங்குகிறேன் என அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் "அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்து விட்டன. 

என்னமோ தெரியவில்லை, நான் இப்பொழுது முன்பை விட அதிக சந்தோசத்தை உங்களால் உணர்கிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன், அன்புக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Antony has started work on Pichaikaran2


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->