புதுத் தோற்றத்தில் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி தரும் நடிகர் சிம்பு.! - Seithipunal
Seithipunal


புதுத் தோற்றத்தில் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி தரும் நடிகர் சிம்பு.!

குழந்தை நட்சத்திரமாய் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை, சரவணா, ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பத்து தல படத்தை முடித்துவிட்டு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறார். 

இந்தப் படம் குறித்தான டீசர் கிளிக்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஒரு சரித்திர கதையாக உருவாகி வரும் இந்தப் படத்திற்காக நடிகர் தலை முடியை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் சிம்புவின் புதுத்தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது நடிகர் சிம்பு மலேசியாவில் நடந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற போது ஏர்போர்ட்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதுமட்டுமல்லாமல், நடிகர் சிம்பு அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், மேடையில் பாடலும் பாடியுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor simbu new look photo viral in social media


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->