நீங்க அரசியல் பண்ண என் குடும்பம் தான் கிடைத்ததா? ஆளுங்கட்சி அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் நாகார்ஜுனா! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் பெண் அமைச்சருக்கு, நடிகர் நாகார்ஜுனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநில பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு நடிகர் நாகார்ஜுனா கடும் கண்டனத்தை தெரிவித்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில், எதிர் தரப்பினரை (எதிர்க்கட்சியை) விமர்சிக்க நடிகர்களின் வாழ்க்கையை பயன்படுத்த வேண்டாம்.

முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் எனது குடும்பம் குறித்து கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானது.

மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்து உங்கள் கருத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்" என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா - நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா திருமண விவாகரத்து விவாகரத்தில், எதிர்க்கட்சியை சேர்ந்த கேடி ராமராவ் தான் காரணம் என்று, அமைச்சர் சுரேகா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுனா தனது கண்டனத்தை தெரிவித்து, அவர் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Nagarjuna Condem to TDP Minister


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->