#BigBreaking || நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.! எவ்வளவு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகை விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு என மத்திய அமைச்சர் அனுராத் தாகூர் கூறியுள்ளார்.

அனைத்து விதமான வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நடுத்தர மக்கள்களில் குறிப்பாக பெண்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய வகையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. 

முதலில் உஜ்வாலா திட்ட பயனாளர்களுக்கு மட்டும் ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு ஏற்றப்பட்ட நிலையில் தற்பொழுது அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தில் கீழ் சிலிண்டர் வாங்கும் பயனாளர்களுக்கு ஏற்கனவே 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் 200 ரூபாய் குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வாங்கும் பயனாளர்களுக்கு 400 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மற்ற பயனாளர்களுக்கு 200 ரூபாய் சிலிண்டர் மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Cabinet approves reduction in gas cylinder price rs200


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->