முதலீட்டாளர்கள் அதிர்ச்சி! ஒரு லட்சத்தை கடந்த தங்கம்… அடுத்த இலக்கு ரூ.2 லட்சமா....? இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கம் விலை ஒரு லட்சத்தைத் தாண்டுமா என்ற அச்சமும் ஆச்சரியமும் நிறைந்த நாட்கள் இப்போது கடந்த காலமாகிவிட்டன. கடந்த 15-ஆம் தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டி, வரலாற்றில் இதுவரை காணாத இமாலய உச்சத்தைத் தொட்டது.இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, “2025 முடிவுக்குள் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும்” என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.

அந்த கணிப்பு சொன்ன வேகத்தைக் காட்டிலும் வேகமாகவே தங்கம் விலை பாய்ந்து, எதிர்பார்ப்பை நிஜமாக மாற்றியுள்ளது.இந்த நிலையில், அடுத்த கட்டமாக 2026 ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்கும் என உலக தங்க கவுன்சில் அதிர்ச்சி தரும் கணிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த முன்னறிவிப்புக்கு சாட்சியமாய், தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.அந்த வரிசையில், இன்றும் தங்கம் விலை புதிய சாதனை படைத்துள்ளது.இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.12,820-ஆகவும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்பனையாகிறது.

இதன் மூலம், தங்கம் மீண்டும் ஒருமுறை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.தங்கத்துக்குப் போட்டியாக, வெள்ளி விலையும் அதே வேகத்தில் பாய்ந்து வருகிறது.இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனையாகிறது.பார் வெள்ளியின் விலை ரூ.2,45,000-ஆக உயர்ந்து, வெள்ளியும் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த 5 நாட்களின் தங்கம் விலை நிலவரம் (22 காரட் – ஒரு பவுன்)
24-12-2025 – ரூ.1,02,400
23-12-2025 – ரூ.1,02,160
22-12-2025 – ரூ.1,00,560
21-12-2025 – ரூ.99,200
20-12-2025 – ரூ.99,200
கடந்த 5 நாட்களின் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)
24-12-2025 – ரூ.244
23-12-2025 – ரூ.234
22-12-2025 – ரூ.231
21-12-2025 – ரூ.226
20-12-2025 – ரூ.226


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Investors shocked Gold crosses one lakh next target 2 lakhs What todays prices


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->