பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுத்த ஆசிரியர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!!
death penalty to teacher for gave poison food to students in china
சீனாவில் மழலையர் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டிலுள்ள ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில், வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பள்ளியில் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட அந்த சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வான் யுன்னை கைது செய்தனர்.

பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த அந்த நாட்டின் நீதிமன்றம் அவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கியது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் சுமார் 10 மாதம் கழித்து சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல், வான் யுன் தனது கணவரையும் விஷம் வைத்து கொன்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால், நீதிமன்றம் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் விஷத்தன்மை கலந்த உணவைக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
death penalty to teacher for gave poison food to students in china