ஜிம்பாப்வேயில் சோகம்! நடுவானில் வெடித்து சிதறிய விமானம்: இந்திய தொழில் அதிபர் மகனுடன் பலி!  - Seithipunal
Seithipunal


ஜிம்பாப்வே, முரோவா நகரில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஹர்பால் ரந்தாவா என்பவர் தங்கம், நிலக்கரி, நிக்கல், தாமிரம் ஆகியவற்றை சுத்திகரிக்கும் ரியோசிம் என்னும் சுரங்க நிறுவனத்தை நடத்தி வந்தார். 

இவர் தனது மகன் மற்றும் நண்பர்களுடன் ஹராரேவில் இருந்து முரோவா நகருக்கு செஸ்னா 206 ரக விமானத்தில் புறப்பட்டு சென்றார். 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலிருந்து உடல் சிதறி உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் உயிரிழந்த தொழில் அதிபர் ஹர்பால் ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஜெம் ஹோல்டிங்சின் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடன் உயிரிழந்த அவரது மகனுக்கு 25 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zimbabwe plane exploded Indian businessman died with his son


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->