1 கோடிக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு.! உக்ரைன் அதிபர் கவலை - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரையின் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.

இதனால் உக்ரைன் முழுவதும் நகரங்களைத் தாக்கி நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை முடக்கியதால், ஒரு கோடிக்கும் அதிகமான உக்ரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

இதில் ஒடெசா, வின்னிட்சியா, சுமி மற்றும் கிய்வ் ஆகியபகுதிகள் தொடர் ஏவுகணை தாக்குதலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மின் வினியோகத்தை சீர் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Zelensky worried More than 1 crore Ukrainians are without electricity


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->