#Breaking: உலகளவில் முடங்கியது யூ டியூப் சேவை - பயனாளிகள் பாடல்கள் கேட்க முடியாமல் சோகம்.! - Seithipunal
Seithipunal


உலகளவில் இணையதளத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் இணையதளங்கள் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையத்தளங்களில் இன்ஸ்டாகிராம், முகநூல், ட்விட்டர், ஷார் சாட் மற்றும் வாட்சப் போன்ற பல்வேறு தளங்கள் பெரும்பாலானோரால் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. 

தங்களின் இன்பமான பொழுதுகளை, இனிமையான நிகழ்வுகளை அதிகளவு பகிர இன்ஸ்டாகிராம், முகநூல், ட்விட்டர், ஷார் சாட் மற்றும் வாட்சப் போன்ற பல்வேறு செயலிகள் உதவி செய்கிறது. அவ்வப்போது இந்த செயலிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்குவதும், பின்னர் அது சரியாவதும் இயல்பானது. 

இந்நிலையில், உலகளவில் விடியோக்களை பார்க்கவும், பகிரவும், இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டே தங்களின் பொழுதுகளை கழிக்கவும் யூ டியூப் சிறந்த நண்பனாக பலருக்கும் இருந்து வருகிறது.

தற்போது சர்வர் பிரச்சனையால் யூ டியூப் செயலி 26 ஏப்ரல் 2021 அன்று மாலை 5.20 மணியளவில் முடங்கியுள்ளது. பின்னர் சிறுது நேரத்திற்கு பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு, யூ டியூப் இயல்பு நிலைக்கு திரும்பியது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTube Down due to Server Problem 429 on 26 April 2021 at 5.30 PM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->