மீன் சாப்பிட்டதால் கோமா நிலைக்கு சென்ற பெண்! தோழி தெரிவித்த அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா,கலிபோர்னியாவை சேர்ந்த லாரா பராசாஸ் (வயது 40) இவர் அங்கிருந்து சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார். 

சிறிது நேரத்திலேயே அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டு கால் கீழ் உதடு போன்ற இடங்கள் கருப்பாக மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த லாரா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் முற்றிலும் செயலிழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாராவின் தோழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, லாரா தன் உயிரை கிட்டத்தட்ட இழந்து விட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் கடல் உணவுகளில் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் அதனை முறையாக தயார் செய்து சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும். 

சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியான முறையில் வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்றார். தொடர்ந்து லாராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman eating fish after coma 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->