இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


உத்தப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் மேரியன் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை உட்கொண்டதால் உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது. பின்னர் அந்த மருந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எத்திலின் கிளைக்கால் ரசாயனம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதனை அடுத்து மேரியன் பயோ டேக் நிறுவனத்தின் தயாரிப்புகளான டோக்-1 மேக்ஸ் மற்றும் அம்ப்ரோனால் என்ற இரண்டு இருமல் மருந்துகளை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இரண்டு இரும்பல் மருந்துகளிலும் அதிக அளவு எத்திலின் கிளைக்கால் ரசாயனம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு மருந்துகளும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு உகந்ததில் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதேபோன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல் நல குறைவால் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. இதற்கு காரணம் ஹரியானா மாநிலத்தில் சோனிபட் மெய்டன் மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மாசடைந்த நான்கு இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளின் பயன்பாட்டை கைவிடுமாறு உலக நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WHO warning do not use indian cough medicine


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->