விண்வெளியில் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமா..? சீனா ஆய்வாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன..?
What do Chinese researchers research findings say about having a baby in space
சீன விஞ்ஞானிகள் தியான்ஷோ சரக்கு விண்கலத்தில் மனித இனப்பெருக்க செல்களை வளர்த்து, விண்வெளியில் குழந்தை பெறும் சாத்தியத்தை ஆய்வு செய்துள்ளனர்.
விண்வெளியில் மனித இனப்பெருக்க செல்களை வளர்த்து, அவற்றின் வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்த ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் (China’s Tianzhou cargo spacecraft) தியான்ஷோ சரக்கு விண்கலத்தை பயன்படுத்தியுள்ளனர்.
சீன அறிவியல் அகாதமியின் ஷாங்காய் தொழில்நுட்ப இயற்பியல் நிறுவனம் ( Chinese Academy of Sciences’ Shanghai Institute of Technical Physics) மற்றும் பெய்ஜிங்கின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் (Beijing’s Tsinghua University) சேர்ந்த குழுவினர், ஆரம்பகட்ட மனித இனப்பெருக்க செல்கள் பூமியில் வளர்வது போல விண்வெளியில் சிறப்பாக வளரவில்லை அல்லது வளர்ச்சியடையவில்லை என்று கண்டறிந்துள்ளனர்.

அதாவது, விண்வெளியில், ஆரம்பகால முன்னோடி இனச்செல்களை உருவாக்கும் வெற்றி விகிதம் சுமார் பாதியாகக் குறைகிறது என்றும், அதே நேரத்தில் ஆரம்பகால விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செல்கள் 25 சதவீதத்திற்கும் மேலாக மெதுவாகப் பெருகுகின்றன என்று ஜூலை 15 அன்று 'சயின்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு microgravity மற்றும் அண்டக் கதிர்வீச்சு காரணமாகக் கூறப்படுகிறது.
அத்துடன், இது விண்வெளிச் சூழலில் மனித கரு ஸ்டெம் செல்களை இனச்செல்களாக வெற்றிகரமாக வேறுபடுத்திய உலகின் முதல் ஆய்வு என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
What do Chinese researchers research findings say about having a baby in space