தூத்துக்குடியில் போர்க்களமான பொருட்காட்சி...! அடிதடி, அடித்து நொறுக்கல்... தவெகவினர் 10 பேர் மீது பாய்ந்தது வழக்கு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா வருகிற 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திரளான பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக ஆலயம் அருகேயுள்ள மைதானத்தில் அமைக்கப்படவுள்ள பொருட்காட்சிக்கான அரங்குகள், மின்வசதிகள் மற்றும் பிற கட்டமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பொருட்காட்சி அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, த.வெ.க.வைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் அங்கு வந்து பணியில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. வாய்த்தகராறு முற்றியதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், டியூப் லைட்டுகள் மற்றும் பிற பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த திடீர் சம்பவத்தால் பொருட்காட்சி திடலில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தென்பாகம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பின்னர், பொருட்காட்சி ஏற்பாட்டாளர் டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில், த.வெ.க.வைச் சேர்ந்த திவாகர் உள்ளிட்ட 10 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த மோதலுக்கான பின்னணி, சொத்து சேதத்தின் அளவு மற்றும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் காவலர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வந்த நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், தூத்துக்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

exhibition Thoothukudi turned battlefield Beating smashing Case filed against 10 Tvk members


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->