ஈரோட்டில் போதை மாத்திரை கும்பல் கைது...! 3 இளைஞர்களை கூண்டோடு தூக்கிய காவல்துறையின் அதிரடி நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, குந்துபாயூர், தவிட்டுப்பாளையம் மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, குந்துபாயூரைச் சேர்ந்த ஜாபர் அலி (21), தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் (26), புதுப்பாளையம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஞானராஜ் (31) ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மூவரையும் காவலர்கள் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் எந்த வகையைச் சேர்ந்தவை, அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, மேலும் இந்த விற்பனைக்கு பின்னால் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drug gang arrested Erode Police action that lifted 3 youths cage


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->